search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி வீட்டில் கொள்ளை"

    வியாபாரி வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி 22 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் ராமராஜ், வியாபாரி. இவரது மனைவி பத்மாவதி (வயது 66). இவர்களது மருமகள் சுபாசினி (33). நேற்று இரவு ராமராஜ் வியாபாரம் வி‌ஷயமாக வெளியே சென்றிருந்தார்.

    பத்மாவதியும், சுபாஷினியும் வீட்டில் இருந்தனர். அப்போது 2 பேர் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி 2 பெண்களையும் மிரட்டினர்.

    பின்னர் வீட்டில் இருந்த 22 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை தெற்கு மாசி வீதி கான்சாமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). இவர் தனது வீட்டின் பின்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி வங்கியில் அடகு வைத்த நகை மற்றும் ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அதனை ஒரு பையில் வைத்து வீட்டில் உள்ள ஆணியில் தொங்க விட்டிருந்தார்.

    இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்தபோது நகை-பணம் இருந்த பை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து தெற்குவாசல் போலீசில் ராம்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தென்காசியில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து பையில் இருந்த 8 1/2 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தென்காசி:

    தென்காசி ஜம்ஜம் நகரை சேர்ந்தவர் பீர்முகம்மது (வயது 58) இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். மீண்டும் நேற்று ஊருக்கு திரும்பிய வந்தார். அப்போது பீர்முகம்மது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டிற்குள் ஒரு பையில் இருந்த 8 1/2 பவுன் தங்க நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீர்முகம்மது தென்காசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×